மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யுவன் சங்கர் ராஜாவினால் தான் என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்தது... தனுஷின் உருக்கமான பேச்சு.!!
தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான கஸ்தூரி ராஜா தமிழில் பெரும்பாலும் கிராமம் சார்ந்த கதைகளை வைத்தே திரைப்படங்களை இயக்குபவர் ஆவார். இவர் இயக்கிய என் ராசாவின் மனசிலே, எட்டுப்பட்டி ராசா, வீரத்தாலாட்டு போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் சில படங்களில் தொடர் தோல்வியை தழுவியதால் மிகபெரிய அளவில் இவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இதனால் இவரின் சொந்த கிராமத்திற்கே சென்று விடலாம் என்று முடிவு எடுத்த கஸ்தூரி ராஜாவிடன் அவரது மகனான செல்வராகவன் இறுதி வாய்ப்பாக ஒரு படத்தை இயக்குகிறேன் என்று கூறியுள்ளார். அவ்வாறு உருவான படமே துள்ளுவதோ இளமை. பலரிடமும் கடன் வாங்கியே இந்த திரைப்படம் உருவாகியது. யாரும் எதிர்பாராத விதமாக மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது.
மேலும், இப்படத்தில் நடிகர் தனுஷ் அவரின் சொந்த பெயரான பிரபுவை மாற்றி தனுஷ் என வைத்துகொண்டு இப்படத்தில் அறிமுகமானார். துள்ளுவதோ இளமை வெளிவந்த புதியதில் பல சர்ச்சைகள் உருவானது. இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைத்து இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றி பெற்றார்.
இதுபோன்ற நிலையில், துள்ளுவதோ இளமை படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுபேட்டை போன்ற படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. இதனாலயே இந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்று தனுஷ் ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். மேலும் என் குடும்பம் இந்த நிலையில் இருப்பதற்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.