மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போன வருஷம் தலைவருக்கு.. இப்போ தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு தெரியுமா?? மத்திய அரசு அறிவிப்பு!!
சினிமாதுறையில் சிறந்த முறையில் பணியாற்றி வரும் கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கபட்டு வருகிறது. இந்த விருது கலைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதாகும். இது வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு சமமான விருதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது பிரபல பாலிவுட் நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என
மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார். நடிகை ஆஷா பரேக் கடந்த 1952 ஆம் ஆண்டு 10 வயதில் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த அவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து செல்வாக்குமிக்க டாப் நடிகையாக வலம் வந்தவர்.
இவர் குஜராத்தி, பஞ்சாபி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவரது கலைப்பணிக்காக 1992 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது 79 வயது நிறைந்த நடிகை ஆஷா பரேக்குக்கு 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு மதிப்புமிக்க இந்த விருதை பெற்றுள்ளார்.