மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குலதெய்வ கோவிலுக்கு சென்று VJ புகழ் செய்த செயல்.! ரசிகர்கள் வாழ்த்து.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த நடிகர் புகழ் தன்னுடைய மகளோடு முதல் தீபாவளியை கொண்டாடியிருக்கிறார். இந்த நிலையில், நேற்று தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிகிறது. ஆகவே தன்னுடைய மகளுக்கு முதல் பூ முடியை எடுத்திருக்கின்றார்.
குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி, மக்கள் மனதை கவர்ந்த புகழ் தற்சமயம் வெள்ளித் திரையிலும் நகைச்சுவை நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில்தான் நடிகர் புகழுக்கும், கோயமுத்தூரை சேர்ந்த பென்சிஸ் என்ற பெண்ணுக்கும் சென்ற வருடம் காதல் திருமணம் நடைபெற்றது. சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரிதன்யா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது பற்றி கருத்து தெரிவித்திருந்த நடிகர் புகழ், தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த இன்னொரு தாய், மகளல்ல மகாராணி என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்தான் இன்று காலை விழுப்புரம் அருகேயிருக்கின்ற தன்னுடைய குலதெய்வ கோவிலான தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் தன்னுடைய குடும்பத்துடன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து தன்னுடைய குழந்தைக்கு பூ முடி எடுத்து புகழ் வழிபட்டிருக்கிறார். மேலும் இந்த கோவிலில் தான் புகழ் மற்றும் பென்சி திருமணமும் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற இடத்திலேயே தன்னுடைய பிறந்த நாளில் மகளுக்கு பூ முடி எடுத்திருக்கிறார் நடிகர் புகழ்.