திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அடடடடே..." 'ரீ என்ட்ரி' கொடுக்கும் "தாவணி போட்ட தீபாவளி" நாயகி.! மீண்டும் ரன் பட ஜோடி!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் டெஸ்ட். இந்தத் திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
இவருடன் மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கே பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகியாக இருந்த மீரா ஜாஸ்மின் இந்தத் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இதனைப் பற்றிய செய்திகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இவர் பாலா, சண்டக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர். நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் திரைப்படத்தின் மூலம் இவர் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதால் இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி இருக்கிறது.