மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கலக்கத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார்... ஜெயிலர் பட வெற்றிதான் காரணமா.?.!
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி ஒருவர் தான் என மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த மற்றும் தர்பார் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தோல்வியடைந்தன. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் கதை முடிந்து விட்டது இனி அவர் அவ்வளவுதான் என சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வந்தது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நான் தான் சூப்பர் ஸ்டார் என நிரூபித்து இருக்கிறார் ரஜினி.
ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் கலக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்குக் காரணம் அவரது மகள் இயக்கத்தில் வெளிவர இருக்கும் லால் சலாம் என்ற திரைப்படம் தான் எனவும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. அந்தத் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அந்த கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியீட்டின் போது பலரும் ரஜினிகாந்தை கேலி செய்து வந்தனர். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு வரவிருக்கும் லால் சலாம் படத்தில் தனது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற கலக்கத்தில் சூப்பர் ஸ்டார் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.