மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கொல மாஸ்..." கமல்ஹாசனின் 233 வது படத்தின் டீசர்... டைரக்டர் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல.!
தமிழ் சினிமாவில் உலகநாயகனாக விளங்கி வருபவர் கமல்ஹாசன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் கதையாசிரியர் பாடலாசிரியர் பாடகர் தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர்.
இவரது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாஸில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகளை தொடர்ந்து வந்தார் கமல்.
இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது 233 வது திரைப்படத்திற்கான கதை தேர்வுகளில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து பல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்று பல செய்திகள் வெளி வந்தாலும் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சமீபத்தில் வெளிவந்த துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கிய எச்.வினோத் உடன் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதைப்போலவே கமல்ஹாசன் மற்றும் எச் வினோத் ஆகியோரின் கூட்டணி முடிவாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் அறிமுக டீசர் என்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகும் வகையில் இருக்கிறது. ரைஸ் டு ரூல் என்ற வாசகத்துடன் வெளியாகி இருக்கிறது இந்த திரைப்படத்தின் டீசர். விரைவிலேயே நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு படத்தின் பெயர் பற்றி அறிவிப்பும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.