மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பைட் கிளப் திரைப்படத்தின் முதல் வார வசூல் இத்தனை கோடியா.! வாய்ப்பிளக்கும் பிரபலங்கள்.!
உறியடி விஜயகுமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பைட் கிளப் திரைப்படத்தை அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கியிருந்தார். அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜீஸ்வாட் நிறுவனமும்,ஆதித்யாவின் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரித்திருந்தது.
கடந்த 15-ஆம் தேதி இந்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கார்த்திகேயன், மோனிஷா சங்கர் தாஸ், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வடசென்னையை பின்புலமாக கொண்டு சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, இயக்குனர் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார்.
இந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரடக்ஷனை முடிப்பதற்கு 1 வருடமும், படமாக்கப்படுவதற்கு 1 வருடமும், கதை திரைக்கதையை எழுதுவதற்கு 1 வருடமும் என மொத்தம் 3 வருடங்கள் பிடித்ததாக இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தின் மேக்கிங் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் இந்த திரைப்படம் வார விடுமுறை நாட்களில் 5.75 கோடியை வசூல் செய்திருப்பதாக பட குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 7 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.