பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் புகுந்த புது வில்லி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...
இன்றும் இளமையுடன் ஜொலிக்கும் நடிகை திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
![Thirisa total praperty value](https://cdn.tamilspark.com/large/large_trishakrishnan16416246278271641624653707-48520-1200x630.jpg)
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருபவர் நடிகை திரிஷா. இவர் விஜய், அஜித், கமல் போன்ற முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை திரிஷா மொத்த சொத்து மதிப்பு குறித்த புதிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது சென்னையில் 6 கோடி மதிப்பிலான சொகுசு வீடு ஒன்றை வைத்துள்ளார். மேலும் 3 விலை உயர்ந்த சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.
மேலும் சில பிராண்ட் கம்பெனிகளில் அம்பாசிடராகவும் உள்ளார். நடிகை திரிஷா தற்போது ஒரு படத்திற்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். மேலும் விளம்பரங்களிலும் நடித்து அதன் மூலமும் சம்பாதித்து வருகிறார். இவருடைய ஆண்டு வருமானம் 9 கோடி ஆகும். இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு 75 கோடியில் இருந்து 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தாவின் சொத்து மதிப்பை விட குறைவாகவே வைத்துள்ளார் திரிஷா.