திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உண்மையில் நடிகர் அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் - பொது நிகழ்ச்சியில் புகழ்ந்து கூறிய பிரபல நடிகை.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தை பற்றி நடிகை திரிஷா யுனிசெப் விழாவில் அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் கூறியுள்ளார்.
மேலும் அவர் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் மகள் மற்றும் அப்பா உறவை பற்றி கூறும் கதையாகும். நேர் கொண்ட பார்வை படம் பெண்கள் பாதுகாப்பு பற்றி கூறும் கதையாகும் இந்த இரண்டு படத்திலும் நடிகர் அஜித் நடித்தது பாராட்டுக்கு உரியது என்று கூறி உண்மையில் நடிகர் அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார்.