53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
முடிவுக்கு வந்தது ரசிகர்களின் செம பேவரைட் ஹிட் சீரியல்! எப்போது தெரியுமா? பிரபல தொலைக்காட்சி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் திருமணம். இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் ஹீரோவாக சித்துவும், ஹீரோயினாக ஸ்ரேயாவும் அறிமுகமானார்கள். கணவன் மனைவியாக நடித்த இந்த ஜோடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
சித்து டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர். மேலும் இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருமணம் தொடர் இதுவரை 600க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் பேவரைட் சீரியலாக உள்ளது.
இந்நிலையில் திருமணம் தொடர் இந்த வாரத்துடன் அதாவது 16.10.2020 அன்றோடு நிறைவடைய உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலர்ஸ் தொலைக்காட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து சித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ராஜாராணி 2 சீரியலில் நடிக்க உள்ளார்.