"லிங்கத்துக்கு கோவில் கட்டியதால் இராஜராஜசோழனின் மீது இந்து அடையாளத்தை திணிப்பதா?.. வெற்றிமாறன் பெரியாரின் பேரன்" - திருமாவளவன் ட்விட்..!! 



Thirumavalavan Speech about Director Vetrimaran

 

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் அவர் பேசிய போது, திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, இராஜராஜசோழனை இந்து அரசனாக்குவது என்று அடையாளத்தை பறித்துவிட்டார்கள் என்று கூறினார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பவே, திரைப்பிரபலங்கள் பலரும் தஞ்சையில் சிவனுக்கு கோவிலை கட்டியுள்ளார். அவர் இந்து கிடையாது என்றால் கிறிஸ்டினா? என்ற கேள்வியை எழுப்பினர். மேலும், பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். 

thirumavalavan

இந்த நிலையில், வெற்றிமாறனின் பேச்சுக்கு திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜராஜ சோழனின் காலத்தில் சைவம் வேறு, வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு. திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாகவே மோதிக்கொண்டனர். இதனால் மாறி மாறி மதமாற்றம் செய்துகொண்டனர்.

அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை. இந்துக்கள் கிடையாது என உரக்க சொல்கிறேன். போராடவும் செய்கிறேன். 1000 வருடங்களுக்கு முன்னதாக லிங்கத்துக்கு பெரும்கோயில் கட்டியதால் அவர் மீது இன்றைய அடையாளத்தை திணிப்பது சரியா? இது வரலாற்று திரிபாகாதே? இதைத்தான் இயக்குனர் வெற்றிமாறனும் குறிப்பிட்டார். அவர் பெரியாரின் பேரன்" என பதிவிட்டுள்ளார்.