ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வேற லெவல் வலிமை அப்டேட் கொடுத்த திருப்பூர் மாவட்ட கலெக்டர்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் தல அஜித்தின் 60வது திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச். வினோத் இயக்குக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் ஆக்சன் கலந்த காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தல ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். மேலும் ரசிகர்கள் படக்குழு துவங்கி பிரதமர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். ரசிகர்களின் இத்தகைய செயல்களால் அதிருப்தி அடைந்த நடிகர் அஜித் அவர்களை பொறுமையாக இருக்க கூறி அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
Here is the #Valimai Update மக்களே 😀 ! #ValimaiUpdate 😎 #TNElections2021 pic.twitter.com/Duwn26Si2G
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) March 9, 2021
இந்த நிலையில திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுவும் வலிமை அப்டேட் மக்களே என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜனநாயகத்தின் வலிமை உங்களது ஒவ்வொருவரின் ஓட்டியிலும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான விழிப்புணர்வு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.