"விஜய்க்கு 100 கோடி சம்பளம் வந்ததுக்கு இதான் கதை..." மீண்டும் சர்ச்சையில் மீசை ராஜேந்திரன்.!



this-is-how-vijay-got-100-crore-salary-meesai-rajendran

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனில் ரஜினிக்கு போட்டியாக இருக்கும் ஒரே நடிகர் தளபதி விஜய். சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில் லியோ திரைப்படம் ஜெயிலர் வசூலை தாண்டிவிட்டால் தனது மீசையை எடுத்து விடுவதாக சவால் விட்டிருந்தார் சினிமா நடிகர் மீசை ராஜேந்திரன்.

Kollywoodதற்போது இவர் மேலும் ஒரு சர்ச்சையான கருத்தை கூறி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவாக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு தொடர்ந்து விஜயை தாக்கி வருகிறார் மீசை ராஜேந்திரன். தற்போது இவர் விஜய்க்கு 100 கோடி சம்பளம் எப்படி வந்தது என்பது தொடர்பான சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Kollywoodஅதாவது புலி திரைப்படத்தை தயாரித்தவர் விஜயின் மேனேஜர் செல்வகுமார் தான் என்றும் அந்தப் படத்தை தயாரிப்பதற்கு விஜய் தான் காசு கொடுத்தார் என்றும் அந்தப் படத்தில் இருந்து அவர் தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்தவர் விஜயின் தாய் மாமா ஜான் பிரிட்டோ என்றும் அந்தப் படத்திற்குப் பிறகு அவர் தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தியதாகவும் தெரிவித்தார். இவ்வாறு தனக்குத் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களை வைத்தே படம் எடுத்து அதன் மூலம் தனது சம்பளத்தை உயர்த்தி வருபவர் தான் விஜய் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருக்கிறார். ஆனால் தற்போது அவர் நடிக்க இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக  ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்தத் திரைப்படத்தை தயாரிப்பவர்கள் விஜய்க்கு உறவினர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.