மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மொய்தீன் பாயாக" ரஜினி நடிக்க இதுதான் காரணமா? - பிரபல சினிமா பத்திரிகையாளர் அனந்தனன் பேட்டி!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அநேகமாக முடிந்துவிட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார். இதற்கான சூட்டிங் மும்பையில் வைத்து நடைபெற இருக்கிறது. சமீபத்தில் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இவரது பஸ்ட் லுக் பற்றி ஏராளமான விமர்சனங்கள் இருந்தாலும் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் திரைப்படம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் வேலையில் ரஜினிகாந்த் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பெரும்பான்மையானவர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அனந்தனன் தனது கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.
இது குறித்து கூறியிருக்கும் அனந்தனன் "ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய நட்சத்திரம் நேர்மறையான இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிப்பது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்திலும் இஸ்லாமிய கதாபாத்திரத்திலேயே நடிக்க இருக்கிறார். தற்போது இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக பரப்பப்பட்டு வரும் விஷம கருத்துக்களுக்கு எதிரான நிலை தன்னுடையது என்பதை காட்டுவதற்காகவே இந்த இரண்டு திரைப்படங்களிலும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.