திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினி ஆன்மீகத்தில் மூழ்கியதற்கு இந்த பெண் தான் காரணம்.! யார் அந்த பெண் தெரியுமா.!?
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழில் தொடர்ந்து நடித்து பல ஹிட் திரைப்படங்களை அளித்து சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்றுள்ளார். தனது ஸ்டைலாலும், நடிப்பு திறமையினாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் ரஜினி.
தற்போது வரை ரஜினி படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். தற்போது ரஜினி அமைதியாகவும், ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு ஒரு பெண்தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
அதாவது சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் ரஜினிகாந்த் மிகவும் கோபப்படும் அடாவடியான மனிதராக இருந்து வந்துள்ளார். மேலும் மது போதைக்கு அடிமையாகவும் இருந்துள்ளார். தொடர்ந்து இரவு பகல் என்று படங்களில் தூக்கமில்லாமல் நடித்து வந்ததால் போதை தரும் பீடாவையும் உபயோகப்படுத்தியுள்ளார்.
இது போன்ற நிலையில் 'தர்மயுத்தம்' படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு கிறிஸ்தவ தொழிலதிபரின் வீட்டில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடிக்கடி குடித்துக் கொண்டு படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராமல் இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டின் உரிமையாளரான ரெஜினா என்ற மருத்துவர் ரஜினியிடம் இனி குடிக்க கூடாது என்று சத்தியம் வாங்கியுள்ளார். ரஜினியும் அவரை அம்மாவாக நினைத்து அவரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்துள்ளார். மேலும் ரஜினிக்கு மனநல ஆலோசகராகவும் இருந்துள்ளார். அந்த பென்மணியினாலேயே ரஜினி இப்படி ஒரு அமைதியான நிலைக்கு வந்துள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது.