திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு திரையரங்கில் உணவு தயாரித்து வழங்கிய உரிமையாளர்: குவியும் பாராட்டுக்கள்.!
கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால், பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. அணைகளில் இருந்து தாமிரபரணி ஆறில் நீர் வெளியேற்றப்பட்டதைத்தொடர்ந்து, திருநெல்வேலி நகரமும் வெள்ளத்தில் மிதந்தது.
தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்ககளில் கடும் மழை வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தூத்துக்குடி நகரில் செயல்பட்டு வரும் எஸ்.கே.பி திரையரங்கத்தின் உரிமையாளர், தன்னை இவ்வுளவு நாட்கள் வாழவைத்த மக்களுக்கு உதவிட முடிவெடுத்து, நேற்று மற்றும் அதற்கு முன்தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது திரையரங்கில் உணவு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இதுகுறித்து எக்ஸ் பதிவில், "என்னை வாழ வைக்கும் தூத்துக்குடி மக்களே. இன்று இந்த புயல் சின்னத்தினால் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த நிலைமையில் ஆதரவற்ற எல்லோருக்கும்
திரையரங்கில் உணவு தயாரிக்கப்படுகிறது. நாளை காலை 10:30 மணி முதல் வந்து இங்கே உணவருந்திக் கொள்ளலாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
திரையரங்கு உரிமையாளரின் அறிவிப்பு மற்றும் அன்பார்ந்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.
Let's stay connected this time!
— RAMAIAH (A.S.K.R.D) (@SBKTalkies) December 18, 2023
We are sharing this for nothing but to spread awareness. In doing so, we hope to make a positive impact and lend a helping hand to those in need. #SpreadKindness #SBKTalkies #Flood #Tuticorin #HeavyRainFall pic.twitter.com/kx0evaSb0h
திரையரங்கு நிர்வாகத்தின் பதிவு:
என்னை வாழ வைக்கும் தூத்துக்குடி மக்களே இன்று இந்த புயல் சின்னத்தினால் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கு என்று நான் அறிவேன் இந்த நிலைமையில் ஆதரவற்ற எல்லோருக்கும் @SBKTalkies திரையரங்கில் உணவு தயாரிக்கப்படுகிறது நாளை காலை 10:30 மணி முதல் வந்து இங்கே உணவருந்திக் கொள்ளலாம் என்பதை…
— RAMAIAH (A.S.K.R.D) (@SBKTalkies) December 17, 2023