திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உணவு தயார் செய்து கொடுத்த விஜய் மக்கள் இயக்கத்திற்கு நன்றி: அரசுக்கல்லூரி மாணவியின் நெகிழ்ச்சி பதிவு.!
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொட்டித்தீர்த்த பேய் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சில இடங்களில் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தேசிய மற்றும் மாநில மீட்புப்படை குழுவினர் காலத்தில் இறக்கப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், போல்டன்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுக்கல்லூரியின் விடுதியில் நீர் புகுந்ததால், தரைத்தளத்தில் நீர் தேங்கி உணவு தயாரிக்க இயலாமல் போயுள்ளது. இதனையடுத்து, மாணவிகள் தங்களுக்கு உதவக்கூறி கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த தகவலை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், 25 மாணவிகளுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதற்கு மாணவி ஒருவர் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
We team Thoothukudi #ThalapathyVijayMakkalIyakkam Youth Wing provided food and needs for 25 Sagotharies ( Sisters ) who got stuck in heavy rain inside Govt Girls Hostel Boldenpuram ! @actorvijay @TVMIoffl @BussyAnand #Thoothukudi #ThoothukudiRains pic.twitter.com/qjxBcwyWZ0
— M. BALA (@thebala04) December 18, 2023