மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
64 வயது நடிகருக்கு ஜோடியாகும் நடிகை த்ரிஷா.! 14 வருடங்கள் கழித்து இணையும் கூட்டணி..!
தமிழ் சினிமாவில் முன்னணி நாடிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. கமல், விஜய், அஜித், விக்ரம் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள த்ரிஷா நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லையே என வருத்தத்தில் இருந்தார். அந்த வருத்தம் பேட்ட படம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்திவந்த நடிகை த்ரிஷா கடந்த 5 வருடங்களாக எந்த ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்காமல் இருந்தார். 2015ம் ஆண்டு லயன் என்ற தெலுங்கு படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா வுடன் நடித்திருந்த திரிஷா அதன்பிறகு எந்த ஒரு தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில், 5 வருடங்களுக்கு பிறகு 64 வயதாகும் தெலுங்கு சீனியர் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ஆசார்யா படத்தில் அவருடன் இணைகிறார். ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்த த்ரிஷா தற்போது 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் நடிக்க உள்ளார்.