மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. கமலின் தக் லைப் படத்தின் லுக் இந்த படத்தோட காப்பியா?? வெடித்த சர்ச்சை! வைரலாகும் புகைப்படங்கள்!!
நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்து கமலின் 234 படம் உருவாகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றது.
இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் படத்தில் துல்கர் சல்மான், திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் இந்த படத்திற்கு தக் லைப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தக் லைப் படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் கமலின் லுக்கும், அவரை எதிர்த்து சண்டை போட வரும் நபர்களின் லுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ரைஸ் ஆப் கைவாக்கர் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி போல இருப்பதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அந்தப் படத்தின் காப்பி என கூறி இரு புகைப்படங்களையும் இணைத்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஹாலிவுட் தரத்திற்கு யோசிச்சு உழைக்குறாங்க… மேன்மக்கள் மேன்மக்களே… pic.twitter.com/Eu2TkJoIrw
— leninbharathi (@leninbharathi1) November 7, 2023