மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமல் ஹாசனின் தக் லைப் படப்பிடிப்பு; ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் அசத்தல் லுக்.. வைரலாகும் லீக் போட்டோ.!
உலகநாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் கமல் ஹாசன், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் (Thug Life) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வழங்கும் படத்தில் நடிகர்கள் சிம்பு, துல்கர் சல்மான், ஜெயம்ரவி, திரிஷா, கெளதம் கார்த்திக், நாசர் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
Ulaganayagan #KamalHaasan in New Delhi for #Thuglife shoot🔥#Indian2 pic.twitter.com/DWEABfHw0j
— SundaR KamaL (@Kamaladdict7) May 5, 2024
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. படம் 2024 இறுதியில் அல்லது 2025 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தக் லைப் படத்தில் கமல் 3 தோற்றங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்புகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள கென்னட் பேலஸில் கமல் ஹாசன் நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.