திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இரண்டே நாட்களில் இத்தனை கோடியா! வசூலை வாரி அள்ளும் சல்மான் கானின் டைகர் 3!! கொண்டாடும் ரசிகர்கள்!!
பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த டைகர், டைகர் 2 திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று ஹிட்டான நிலையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக டைகர் 3 வெளியாகியுள்ளது. மணீஷ் ஷர்மா இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் ஸ்பை திரில்லர் ஜானலில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் கத்ரினா கைஃப், இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மேலும் ஷாருக்கான் மற்றும் கிருத்திக் ரோஷன் இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். டைகர் 3 திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
அதாவது டைகர் 3 திரைப்படம் வெளியாகி இரண்டே நாட்களில் ரூபாய் 185 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும் வரும் நாட்களில் பல கோடி வசூலை அள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது