#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இரண்டு கிட்னியும் செயலிழந்த நடிகர் பொன்னம்பலம்..! ஓடிவந்து உதவிய பாஜக தலைவர்..! ரூ.2 லட்சம் நிதியுதவி..!
சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நடிகர் பொன்னம்பலம் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் பொன்னம்பலம். 90 காலகட்டங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு நடிகர். அப்போது கபாலி என்ற பெயரில் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தார். நாட்கள் செல்ல செல்ல பட வாய்ப்புகள் குறைந்தது.
இந்நிலையில்தான் பிக்பாஸ் சீசன் இரண்டில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் பரிச்சயமானார். இந்நிலையில் தனது இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், கமல் சார் மற்றும் ரஜினி சார் இருவரும் கால் செய்து நலம் விசாரித்ததாக பொன்னம்பலம் வீடியோ ஒன்றில் கூறியிருந்தார்.
மேலும், கமல் சார் தனது குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டதாகவும், ரஜினி சார் தனது மருத்துவச்செலவை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறுயிருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பொன்னம்பலத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரது மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கினார்.
முன்னதாக அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்துவந்த நடிகர் பொன்னம்பலம், கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.