#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உங்கள் வாழ்க்கையில் நூறு சதவீதம் வெற்றி பெற..!!. மது, புகை பிடிப்பதை தவிருங்கள்... இயக்குனர் வெற்றிமாறன்..!!
திரையுலகில் பல வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குனர் வெற்றிமாறன் தற்போது, "விடுதலை" என்ற படத்தை இயக்கிவருகிறார். நடிகர் சூரி நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து "வாடிவாசல்" படத்தை நடிகர் சூர்யா நடிப்பில் இயக்க உள்ளார்.
இந்நிலையில் வெற்றிமாறன் குறும்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அதில் அவர் பேசும்போது, மனிதனுக்கு பிறப்பதற்கு முன்னரே இதயம் துடிக்கத் தொடங்கி விடுகிறது. பிட்னெஸ் என்பது உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது மட்டும் கிடையாது. வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாளுக்கு 70 சிகரெட்டுகள் பிடிப்பேன். இயக்குனராக இருக்கும் போது 150 சிகரெட் வரை பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒன்றை என்னால் உணர முடிந்தது, என்னால் என்னுடைய 100 சதவீதத்தை கொடுக்க முடியவில்லை என்பது தான் அது.
இது தவறு என உணர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைபடி சிகிரெட் பிடிப்பதை விட்டு விட்டேன். எனது படங்களில் இனி புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் வருவதை முடிந்த அளவு தவிர்ப்பேன் என்று கூறினார்.