மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#HBD நிவேதா பெத்துராஜ்.. சொக்கவைக்கும் அழகு.. இளைஞர்களின் கனா நாயகிக்கு இன்று பிறந்தநாள்..!
பிரபல மாடல் அழகியாகவும், தமிழ் - தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகியாகவும் வலம்வரும் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் மதுரையில் பிறந்து, பின்னாளில் தூத்துக்குடிக்கு சென்று அங்கிருந்து குடும்பத்துடன் துபாய் சென்று, இங்கிலாந்தின் எடின்பர்க்கில் பட்டம் பயின்றவர்.
துபாயில் 10 வருடம் குடும்பத்துடன் தங்கியிருந்த நிவேதா பெத்துராஜ், ஐக்கிய அமீரக மிஸ் இந்தியா அழகி பட்டத்தையும் கடந்த 2015 ஆம் வருடம் வென்றிருந்தார். கடந்த 2016 ஆம் வருடம் வெளியான ஒருநாள் கூத்து திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, பொதுவாக என் மனசு தங்கம், மெண்டல் மனதில், டிக் டிக் டிக், சித்ரலேகாரி (தெலுங்கு), ஆலா வைகுந்தப்புராமுலு (தெலுங்கு), திமிரு பிடிச்சவன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் திரைப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார். தற்போது, 2 தெலுங்கு திரைப்படங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழில் நடித்த பார்ட்டி திரைப்படம் வர சில வருடங்கள் ஆகலாம்.
தென்னிந்திய சிறந்த திரைப்பட நடிகைகள் விருதுக்கு 2 முறை இவர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் வருடம் ஜீ அப்சரா விருதும் பெற்றுள்ளார். இவர் கடந்த 1991 ஆம் வருடம் நவ. 30 ஆம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 29 ஆகிறது. ஆம் இன்று அவரின் பிறந்தநாள்.