திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசியலுக்கு சென்ற விஜய்... 'தளபதி' இடத்திற்கு போட்டி போடும் டாப் 5 ஹீரோக்கள் லிஸ்ட்.!
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார், என்பது வெறும் வதந்தியாக மட்டும் தான் இத்தனை வருடங்கள் இருந்தது. ஆனால் அதை உண்மையாக்கும் பொருட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய "தமிழக வெற்றி கழகம்"என்ற கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அது மட்டுமல்லாமல் தான் ஒப்புக்கொண்ட படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு முழுமையாக மக்கள் பணியில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார். அவருடைய ரசிகர்கள் முதற்கொண்டு திரை உலகில் பலருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட 5 நபர்களுக்கு மட்டும் கொண்டாட்டமாக இருக்கிறது. தற்போது நம்பர் 1 இடத்தைப் பிடிக்க முயலும் 5 நடிகர்களை பற்றி காண்போம்.
சூர்யா: இவரின் முதல் படமே விஜயுடன் தான் மற்றும் சில படங்களில் இணைந்து பயணித்திருக்கிறார். ஆனாலும் அவரால் விஜய், அஜித் அளவுக்கு ஒரு அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை. தற்போது கங்குவாவை நம்பி இருக்கும் அவர் விஜய் சினிமாவை விட்டு விலகியதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
விஜய்சேதுபதி: என்ன தான் எதார்த்தமான நடிகராக இருந்தாலும் ஹீரோவாக இவரால் ஒரு அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வில்லனாகவும் மற்ற மொழிகளில் கலக்கி வரும் இவர் விஜய்யின் இடம் காலியானதால் அந்த இடத்தை பிடிக்க தயாராகி வருகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன்: இவர் விஜய் இடத்தை பிடிக்க பார்ப்பதாக கடந்த சில காலங்களுக்கு முன்பிருந்தே கிசுகிசு செய்திகள் உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏற்றபடி பல விஷயங்களில் இவர் விஜய்யை ஃபாலோ செய்து வருகிறார். தற்போது விஜய் சினிமாவை விட்டு விலகிய நிலையில் அந்த இடம் நமக்குத்தான் என்று சிவகார்த்திகேயன் குஷியில் உள்ளாராம்.
சிம்பு: சிறு வயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் இவர் இடையில் பல தோல்வி படங்களை கொடுத்து துவண்டு போயிருந்தார். அதை எல்லாம் ஓரங்கட்டி உடம்பை குறைத்து தற்போது நடிப்பில் தீவிரம் காட்டியிருக்கும் சிம்பு, கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை பெருமளவில் நம்பி இருக்கும் சிம்பு, விஜய் அரசியலுக்கு சென்றதில் மிகுந்த குஷியாக உள்ளாராம்.
தனுஷ்: நடிப்பு அசுரனாக பல கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டிருக்கும் இவருடைய படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளமும் பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் கிடைக்கும். ஆனால் விஜய் பட அளவுக்கு இவருடைய படம் வசூல் பெறுவதில்லை. தற்போது விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் அந்த இடத்திற்கான போட்டியில் இவரும் இருக்கிறார்.