மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யூ ட்யூபர் இன்பா அதிரடி கைது.. திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை.!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் இன்பா என்கின்ற இன்பநிதி. இவருக்கு வயது 30. இவர் "இன்பாஸ் டிராக்" என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இவருக்கு 1 லட்சத்து 93 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.
மேலும் இவரது இன்ஸ்டாகிராமில் 82000க்கும் மேற்பட்ட பலோயர்கள் உள்ளனர். இவரது வீடியோக்கள் எல்லாமே பாலுணர்வைத் தூண்டும் வகையில் தான் இருக்கும். இவர் மோனோ ஆக்டிங் மூலம் கணவன் மனைவி உறவுமுறை பற்றி ஆபாசமாகவும், முதலிரவு பற்றியும் பல்வேறு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜய், சமூக வலைதளங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து கொண்டிருந்தபோது, இன்பாஸ் டிராக் சேனலையும் பார்த்துள்ளார்.
இதையடுத்து இவரது வீடியோக்களை பார்த்துவிட்டு மாணவ, மாணவிகள் பாலியல் குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதாலும், இது சமுதாயத்திற்கு சீர்கேடு என்று கூறி திருச்சி சைபர் கிரைம் போலீசார் இன்பா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.