திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பொன்னியின் செல்வன் படம் தான் எல்லாவற்றிற்கும் காரணம்" திரிஷா ரசிகர்கள் உருக்கம்.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமாக இருப்பவர் திரிஷா. இவர் தமிழில் 15 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக வெற்றி நடை போட்டு வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் ஆரம்ப காலகட்டத்தில் விளம்பர படங்களிலும், திரைத்துறையில் குணச்சித்திர நடிகையாகவும் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த திரிஷா தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
இதன் பிறகு சில வருடங்களுக்கு திரை துறையில் எந்த படங்களிலும் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்ட த்ரிஷா சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் மிகப்பெரும் அளவு வெற்றி பெற்று த்ரிஷாவின் கதாபாத்திரம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இப்படத்திற்கு பின்பு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் தொடர்ந்து திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஷியான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இச்செய்தி த்ரிஷாவின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.