மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திரிஷாவுக்கு எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்த போலி சாமியார்.. வைரல் ஆகும் வீடியோ.!
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்திருக்கிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் படங்களை அளித்திருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை இவருக்கென்று ரசிகர் கூட்டங்கள் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.
இதன்படி, மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது.
தற்போது 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி எதிர் மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. ஆனாலும் வரலாற்றுப் பின்னணியுடைய கதையை மணிரத்தினம் அவருக்கு ஏற்றார் போல் இயக்கி இருப்பதால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
இது போன்ற நிலையில், இப்படத்தில் நடித்திருக்கும் த்ரிஷாவிற்கு, சாமியார் ஒருவர் முத்தம் கொடுப்பது போல வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. அதாவது 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் இருக்கும் த்ரிஷாவின் புகைப்படத்திற்கு போலி சாமியார் ஒருவர் முத்தமிடுவது போல் வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.