திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜயகாந்த் மறைவுக்கு.. திரிஷா வெளியிட்ட இரங்கல் பதிவு.!
முன்னால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்திற்கு நுரையீரல் அலர்ஜி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர் உதவியுடன் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமானது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியாகியது. இந்த நிலையில் தன்னுடைய 71 வயதில் விஜயகாந்த் மரணம் அடைந்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவருக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் தற்போது தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.