மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா இத்தனை கோடிகளா!! லியோ படத்தில் நடிப்பதற்காக நடிகை திரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் வெற்றி படங்களை கொடுக்காமல் இருந்த திரிஷா 96 திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் விஜயின் லியோ படத்திலும் நடித்துள்ளார்.
அதில் லியோ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் திரிஷாவை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லியோ படத்தில் நடிப்பதற்காக நடிகை திரிஷா 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.