மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கையில் குழந்தையுடன் த்ரிஷா.. த்ரிஷாவிற்கு திருமணமாகி விட்டதா என்று ரசிகர்கள் அதிர்ச்சி.?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக தனது இடத்தை நிலைநாட்டி வருபவர் த்ரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் 'லியோ' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் திரிஷா.
மேலும், த்ரிஷாவை பற்றி பல சர்ச்சைகளும், வதந்திகளும் வெளிவந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், திரிஷாவின் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது த்ரிஷாவின் குழந்தையா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், த்ரிஷாவின் கையில் இருக்கும் குழந்தை நடிகை மியா ஜார்ஜின் குழந்தை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.