மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா அஜித்துக்கு காதலியா.? மனைவியா.?
லியோ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார்.
இதுவரையில், நடிகர் அஜித்துடன் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள த்ரிஷா, அவருக்கு காதலியாக மட்டும் தான் நடித்துள்ளார். ஆனால் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் முதன்முறையாக அஜித்குமாருக்கு மனைவியாக நடிக்கிறார் நடிகை திரிஷா. இந்த திரைப்படத்தின் படபிடிப்பு அஜர்பைஜானில் ஆரம்பமான சில வாரங்களுக்கு பின்னர் திரிஷா அங்கு சென்று படப்பிடிப்பில் இணைந்து கொண்டார்.
இந்நிலையில் தான், தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்ட த்ரிஷா, சென்னைக்கு திரும்பியிருக்கிறார். அடுத்தபடியாக அவர் மலையாளத்தில் டொவினோ தாமஸ் என்பவருடன் இணைந்து நடித்து வரும் ஐடெண்டிட்டி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடித்து வரும் த்ரிஷா, எதிர்வரும் ஜனவரி மாதம் மறுபடியும் விடாமுயற்சி திரைப்பட படப்பிடிப்பில் இணையவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.