#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
TRPயில் அடித்து நொறுக்கி நம்பர் 1 இடத்தை பிடித்த தர்பார்..! வைரலாகும் ட்விட்டர் பதிவு.
பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருந்தார். மேலும் அப்படத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் லைகா புரொடக்ஷன் தயாரிக்க இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டதில் TRPயில் அடித்து நொறுக்கி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
@Media360India Data for Week 14: Hindi Movies Programmes .Looking for something more? visit https://t.co/CT4Nvm2Rub for custom data on TV viewership pic.twitter.com/rzOdvmzpnX
— BARCIndia (@BARCIndia) April 16, 2020