#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
TRPயில் சரிவை சந்தித்த விஜய் டிவி..! நம்பர் 1 இடத்தை பிடித்தது எந்த சேனல் தெரியுமா?
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்நோயின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நாடு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே இருந்து வருகின்றனர்.
இதனால் எந்த ஒரு நிகழ்ச்சியும் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யமுடியவில்லை. இதனால் தொலைக்காட்சியில் பழைய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இதனால் தற்போது முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி TRP யில் சரிவை சந்தித்துள்ளது.
அதாவது கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட டிஆர்பி வாக்கெடுப்பில் விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி கே.டிவி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை விஜய் டிவி பிடித்துள்ளது. மேலும் சன் டிவி தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.