மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கை போனதை விட லைசென்ஸ் போனது தான் கஷ்டமாக இருக்கிறது" கண் கலங்கிய டி டி எப் வாசன்..
யூட்யூபில் இரு சக்கர வாகனம் அதிவேகமாக ஓட்டி பிரபலமானவராக வலம் வருபவர் டிடிஎப் வாசன். இவருக்கு 2கே கிட்ஸ் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் டிடிஎஃப் வாசன், சமீபத்தில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு பலமுறை ஜாமின் கோரி மனு அளித்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இவரது லைசன்ஸ் நிரந்தரமாக ரத்தானது.
இது போன்ற நிலையில், தற்போது சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனுடன் வெளிவந்த டிடிஎஃப் வாசன், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி டி எஃப் வாசன் கூறியதாவது, "நான் திருந்த வேண்டும் என்ற நோக்கத்தில் எனக்கு தண்டனை கொடுத்த மாதிரி தெரியவில்லை. என் வாழ்க்கையை அளிக்க வேண்டும் என்று இந்த மாதிரி செய்கின்றனர். கை போனது கூட எனக்கு கவலை இல்லை, லைசென்ஸ் போனது தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இன்டர்நேஷனல் லைசென்ஸ் இருக்கிறது அதை வைத்து பைக் ஓட்டுவேன்" என்று மனம் வருந்தி பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.