மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்தை தாண்டி உறவு வைத்தால், உயிரே போகும்.! செவ்வாய்க்கிழமை விமர்சனம்.!
சுரேஷ் வர்மா மற்றும் சுவாதி குனுபதி உள்ளிட்டோருடன் இணைந்து தயாரிப்பாளராக அஜய் பூபதி அறிமுகமாகியுள்ள நிலையில், அவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் செவ்வாய்க்கிழமை. இந்த திரைப்படத்தில் அஜய் கோஷ் , ஸ்ரீ லேகா, அஜ்மல், பாயல் ராஜ்புட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஒரு ஊரில் திருமணத்தை கடந்து தவறான உறவை வைத்திருப்பவர்களின் பெயர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒரு சுவரில் எழுதி வைக்கப்படுகிறது. அந்த சுவரில் பெயர் எழுதப்பட்டவர்கள் உயிரிழக்கிறார்கள். இதன் காரணமாக, அந்த ஊரில் பதற்றம் நிலவி வருகிறது.
இப்படி தொடர்ந்து நடக்கும் மரணத்திற்கு காரணம் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த தொடர் மரணம் ஏன் நடக்கிறது? இந்த மரணத்திற்கு காரணம் யார்? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதையாக இருக்கிறது.
தந்தையால் கைவிடப்பட்டு, அதன் பிறகு பாட்டியின் அரவணைப்பில் வாழும் சூழ்நிலைக்கு ஆளாகி தான் படிக்கும் கல்லூரி ஆசிரியரின் ஆசைக்கு இணைங்கி தன்னையே விருந்தாக்கி அவருடன் திருமண வாழ்க்கையிலும் இணைய இயலாமல் ஏமாற்றத்தை சந்திக்கின்றார் பாயல்.
அதன் பிறகு பல ஆண்களோடு உடலுறவு வைத்துக் கொண்டு, ஊரில் தன்னுடைய பெயரை எடுத்துக் கொள்ளுமளவிற்கு ஒரு சிலரின் சூழ்ச்சியால் ஊர் மக்களிடம் அவமானப்பட்டு, கல்லால் அடிபட்டு ரத்த காயங்களோடு, அந்த ஊரை விட்டு துரத்தப்படுகிறார். படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் விருப்பத்திற்கு உடன்படும் காம உணர்ச்சி, ஏமாற்றத்தில் உண்டாகும் விரக்தி என்று அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பாயல் ராஜ்புத்.
ஆசிரியர் கதாபாத்திரத்தில் வந்து பாயலின் இளமையை நயவஞ்சகமாக வேட்டையாடும் அஜ்மலில் தொடங்கி, பாயலின் பாட்டியாக வரும் ஸ்ரீலேகா நடிப்பு வரையில், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது.
இந்தக் கதையின் மிக, மிக முக்கிய கதாபாத்திரமான மருத்துவராக வரும் நபர் அதோடு ஜமீன்தாராக வரும் நபர் உள்ளிட்டோர் கதையுடன் ஒன்றிணைந்து பயணம் செய்கிறார்கள். நகைச்சுவைக்கு அஜய் கோஷ் இந்த திரைப்படத்தின் கதையோட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்.
உதவி ஆய்வாளராக வரும் நந்திதா ஸ்வேதா தன்னுடைய அலட்டலான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சிகளில் கதையின் திரும்பத்திற்கு மிக, மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது ஜமீன்தாரின் மனைவியாக வரும் பெண்ணின் தத்ரூபமான நடிப்பு.
காட்சிகளுக்கு ஏற்றவாறு மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களின் வசனங்களுக்கு ஏற்றவாறு பின்னணி இசையால் திரைப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் காந்தாரா திரைப்பட இசை அமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத். ஒட்டுமொத்தத்தில் செவ்வாய் கிழமை திரைப்படம் ஆதரவின்றி தவிக்கும் ஒரு பெண்ணின் தவிப்பை கண்முன்னே காட்டியிருக்கிறது.