தவெக முதல் மாநாடு.. விபத்து, மாரடைப்பில் பலியான உயிர்கள்..!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று இலட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து விஜய் ரசிகர்கள் & கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர். அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் தவெக சார்பில் செய்யப்பட்டன.
கட்சியின் கொள்கை அறிவிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட நடிகர் விஜய், பாஜக, திமுக கட்சிகளின் சிந்தாந்தங்களை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனிடையே, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு புறப்பட்டு வந்தவர்களில் ஒருசிலர் விபத்துகளில் பலியாகி இருந்தனர்.
மாநாடு மரணங்கள்
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி பயணம் செய்த இரயில் இருந்த விஜய் ரசிகர்கள் இருவர், விக்ரவாண்டியில் விழா ஏற்பாடுகளில் அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கு, கோபுரத்தை பார்த்து ஓடும் இரயிலில் இருந்து குதித்தனர். இந்த சம்பவத்தில் நிதிஷ் குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல, சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மாரடைப்பால் காலமானார்.
இதையும் படிங்க: 190 கிமீ சைக்கிள் பயணம்.. தவெக மாநாடு நோக்கி மாற்றுத்திறனாளி ரசிகரின் நெகிழ்ச்சி செயல்.!
இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து புறப்பட்ட இளைஞர்கள் இருவர், மணல் லாரி மீது மோதி விபத்தில் சிக்கியதில் வசந்த் என்பவர் உயிரிழந்தார். திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் கலை ஆகியோர் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: தவெக தலைமைக்கு ஷாக் தந்த நிர்வாகிகள்.. பாமகவில் திரண்டு வந்து இணைவு..! காரணம் என்ன?.