மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவல்!! எஸ்கே 23 படத்தில் இணையும் பான் இந்தியா ஸ்டார்கள்.! அட..யார் யார்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதற்கிடையில் தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்கே 21’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 திரைப்படத்தில் நடிக்கிறார்.
இதில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்
ஆக்ஷன் என்டர்டைன்மென்டாக உருவாகவுள்ள எஸ்கே 23 திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் வித்யூத் ஜமால் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.