மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழில் ரீமேக்காகும் சூப்பர் ஹிட் ஹிந்தி திரைப்படம்! ஹீரோ யார்னு பார்த்தீர்களா! வெளியான மாஸ் தகவல்!
ஹிந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்டிகிள் 15. அந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் ஆர்டிகிள் 15 திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனை கனா படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். மேலும் இப்படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். மேலும் ஹீரோயின் மற்றும் துணை கதாபாத்திரங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
ஆர்டிகிள் 15 படத்தில் ஒரு கிராமத்தில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து மரத்தில் தொங்கவிடுகின்றனர். அதை விசாரிக்கவரும் அதிகாரிக்கு சாதியின் பெயரை கூறி தொடர்ந்து பிரச்சினைகள் வருகின்றன. அதனை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. கொரோனா ஊரடங்கு முடிவுக்குப் பிறகு படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.