வெற்றி சான்றிதழை பெற்ற உதயநிதி ஸ்டாலின் முதல்வேலையாக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் நெகிழ்ச்சி புகைப்படம்!!
சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் திமுக கட்சி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
மேலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சுமார் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரிகளிடம் வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேராக திமுக முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று அதை சமர்ப்பணம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.