காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
நாம் யாரும் அறிந்திராத நடிகர் விஜயகாந்தின் மறுபக்கம்! சோசியல் மீடியாக்கள் மறைக்கும் அவரது உண்மை முகம்!
விஜயகாந்த் என்றாலே பிரமாண்டம், அதிரடி என்பது மாறிப்போய் கேலி, கிண்டல் என்றாகிவிட்டது. அதற்கு முற்றிலும் காரணம் இன்றைய சோசியல் மீடியா. இந்த சோசியல் மீடியா 2001 இல் இருந்திருந்தால் கேப்டன் விஜகாந்த் யார் என்பது அன்றே மக்களுக்கு புரிந்திருக்கும்.
ஆம், தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜயகாந்த், இந்தியாவின் மனித நேயத்திற்கான சிறந்த இந்திய குடிமகன் விருதினை கடந்த 2001ஆம் ஆண்டு பெற்றார். நம்மில் இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தனது 66 வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது விஜயகாந்த் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு தொண்டுகளை செய்துவருகிறார். வேறு எந்த நடிகரும் செய்யாத அளவில் அதிக தொண்டுகளை இவர் செய்துள்ளார்.
இவரது உதவிகள் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கு சென்றடைந்ததால், தேசிய அளவில் இவர் அங்கீகரிக்கப்பட்டார். குறிப்பாக குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போதும், ஒரிசா புயலால் பாதிக்கப்பட்ட போதும் விஜயகாந்த் ஏராளமான உதவிகளை அந்த மாநிலங்களுக்கு செய்தார்.
pothuma ilaa veraa eathavathu proof eathirpakkuringalaa....சகோ pic.twitter.com/MZFwpgn1i6
— Sakthivel KMS (@SharpSakthi1) August 25, 2018
அதனைத் தொடர்ந்து, கடந்த 2001ஆம் ஆண்டு விஜயகாந்தின் சேவை மனப்பான்மை, உதவும் குணம் ஆகியவற்றை பாராட்டி இந்தியாவின் மனிதநேயத்துக்கான ‘சிறந்த இந்திய குடிமகன்’ விருதினை இந்திய அரசு வழங்கியது.
டெல்லி தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம் சார்பில் விஜயகாந்திற்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது விஜயகாந்த் கூறுகையில்,
‘தமிழ் தவிர வேறு மொழி எனக்கு தெரியாது. இந்நிலையில் டெல்லியில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் இருந்தது. இங்கு நீங்கள் எல்லாம் தமிழ் உணர்வோடு ஒரு தமிழனை வரவேற்று உபசரித்ததைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனேன்’ என தெரிவித்திருந்தார்.