திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஸ்ருதிஹாசனை பின்தொடர்ந்த மர்ம நபர்.. வெளியான வீடியோவால் பரபரப்பு.!
2000ம் ஆண்டு "ஹே ராம்" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சுருதி ஹாசன். இவர் கமலஹாசனின் மூத்த மகள் ஆவார். 2009ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான "லக்" திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ருதி.
தமிழில், 2011ஆம் ஆண்டு வெளியான "7ம் அறிவு" படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, புத்தம் புது காலை, லாபம் என தமிழில் சில படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட சுருதி ஹாசன், பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடியுள்ளார். தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சுருதி விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் தனது காரைத் தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நபர் ஸ்ருதியின் குழுவினருடன் வந்து, அவரிடம் பேச முயற்சித்துள்ளார். அதற்கு ஸ்ருதி உங்களை யாருன்னு தெரியாது என்று கோபமாக கூறிவிட்டு செல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.