பட்டையை கிளப்பும் 'வாத்தி கம்மிங்'.!! 10 நொடி புரோமோவுக்கு 10 கோடி வீவ்ஸ்! வைரல் வீடியோ!



vaathi-comming-promo

தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

மாஸ்டர் திரைப்படத்தின் புதிய பாடல் புரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' என்னும் பாடலின் லிரிக் வீடியோ 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் இந்த புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.