மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒருவழியா முடிவுக்கு வந்த வடசென்னை படக்குழு; ரசிகர்கள் மகிழ்ச்சி
பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு மீண்டும் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் வடசென்னை.
சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'மெட்ராஸ்" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் வடசென்னை படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘வடசென்னை’ நீண்ட வருடங்களாக உருவாகி வந்த படம். இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில் ‘வடசென்னை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி அக்டோபர் 17 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக அக்டோபர் 17 ஆம் தேதி வெளியிடவுள்ளது.