திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்காக விஜய்டிவி செய்த நெகிழ்ச்சி காரியம்! வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வடிவேலு பாலாஜி. இவர் நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அனைத்து காமெடிகளிலும் அசால்டாக கலக்கியுள்ளார். பின்னர் சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பை அடுத்து அவர் ஒருசில வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் 45 வயது நிரம்பிய அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, கை கால்கள் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவேலு பாலாஜியின் இந்த மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வடிவேலு பாலாஜியை அறிமுகப்படுத்திய விஜய் டிவி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் பிரபலங்கள் பலரும் வடிவேலு பாலாஜியுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை குறித்து பேசி கதறி அழுகின்றனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.