மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. நடிகர் வடிவேலுதானா இது!இப்படி ஆள் அடையாளமே தெரியாம ஆகிட்டாரே! லீக்கான புகைப்படத்தால் பதறிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனக்கென தற்போது வரை யாராலும் நிரப்பபமுடியாத ஒரு மாபெரும் இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் வடிவேலு. அவரது உடல் பாவனைகளும், காமெடியான டயலாக்கும் இன்றும் தமிழ் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கபட்டு வருகிறது.
தற்போது இணையத்தில் ட்ரெண்டாகும் மீம்களும், ட்ரோல்களும் நடிகர் வடிவேலுவின் காமெடியை வைத்தே உருவாகி வருகின்றது. இந்நிலையில் தற்போது அவருக்கு போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடிக்க உள்ளார். மேலும் அவர் தற்போது சூட்டிங்கில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் வடிவேலு முதல்நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில், வடிவேலு நன்கு உடல் இளைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஏன்? உங்க உடம்புக்கு என்னாச்சு? என பதறியுள்ளனர்.