திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு இப்படியொரு பிரச்சினையா! மருத்துவமனையில் திடீர் அனுமதி.!
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி காமெடி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவர் பல தடைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக வடிவேலு உட்பட படக்குழுவினர்கள் லண்டன் சென்று 10 நாட்களுக்கு மேலாக அங்கு தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் வடிவேலு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார்.
அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனோ நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் வடிவேலுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.