மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சினிமாவின் பொற்காலத்தை 'கட்டில்' மூலம் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்!" வைரமுத்துவின் சர்ச்சையான பேச்சு.!
1980ஆம் ஆண்டு வெளியான "நிழல்கள்" படத்தில் "பொன்மாலைப் பொழுது" என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானார் வைரமுத்து. பல்வேறு கவிதை தொகுப்புகள், கட்டுரைகள், புதினங்கள் ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ள இவர், 7முறை தேசிய விருதினை வென்றுள்ளார்.
இந்நிலையில் மேப்பிள் லீப்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் சார்பில் இ.வி.கணேஷ் பாபு தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் "கட்டில்". பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் செய்த படத்தில் மீரா ராஜ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள படத்தில் வைரமுத்துவும், மதன் கார்கியும் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப் படம் குறித்து பேசிய வைரமுத்து, "கட்டில் போன்ற சிறு படங்கள் ஓடினால் தான் புதிய கலைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பார்கள்.
துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ் பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். பட போஸ்டர்களில் பெண்களுக்கு இடம் தந்த காலம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம். அந்த பொற்காலத்தை தனது "கட்டில்" மூலம் மீட்டுக்கொண்டு வந்துள்ளார் கணேஷ் பாபு" என்று கூறியுள்ளார்.