மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உண்மையைக் காலம் சொல்லும்" - பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்!
திரையுலகில், தேசிய அளவில் மிகவும் பிரபலமான திரைப்பட பாடலாசிரியர்களில் ஒருவரும் 7 முறை தேசிய விருது பெற்றவருமான கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பிரபல பாடகி சின்மயி பல வருடங்களுக்கு முன்பு அவருக்கு நேர்ந்த கசப்பான சம்பவத்தை கூறியுள்ளார்.
மேலும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சின்மயி, ஒரு முறை சுவிட்சர்லாந்தில் பாட்டுக் கச்சேரிக்கு சென்றிருந்தோம். அப்போது நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருந்தோம்.
அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து,(அவரின் பெயரை கூற விரும்பவில்லை) கவிஞர் வைரமுத்த உங்களுக்காக ஹொட்டல் ரூமில் வெயிட் பண்ணுகிறார் என கூறினார்.
நான் அப்போதே அவர் முகத்திரையைக் கிழித்திருப்பேன். அவர் மீது திரையுலகம் வைத்திருந்த மரியாதைக்காக நான் எதையும் செய்யாமல் விட்டுவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த உண்மையை சொல்வதால் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை என சின்மயி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள வைரமுத்து, "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும். என கூறியுள்ளார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018