#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! என்ன? எப்போ தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அவர் போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வலிமை ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது வலிமை திரைப்படம் ZEE 5 OTT தளத்தில் மார்ச் 25ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமை ரிலீசுக்காக YMCA மைதானத்தில் 10000 அடியில் பிரமாண்ட போஸ்டரை ஜீ நிறுவனம் வைத்துள்ளது. மேலும் வலிமை ஓடிடிக்காக ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.